திண்டுக்க்லில் மல்லிகை விலை சரிவு
1:52 AM செய்திகள், திண்டுக்க்லில் மல்லிகை விலை சரிவு 0 கருத்துரைகள் Admin
திண்டுக்க்லில் அதிக பனிப்பொழிவால், பல பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. வியாபாரிகள் வரத்து குறைவால் கடந்த வாரம் அனைத்து பூக்களின் விலையும் குறைந்திருந்தது. ஒரு கிலோ மல்லிகை, கனகாம்பரம் 200 ரூபாய்க்கும், காக்கரட்டான் 40க்கும், சம்மங்கி 50க்கும் விற்கப்பட்டது.
முகூர்த்த நாளாக இருந்ததால், பூக்களின் விலை கூடியது.ஒரு கிலோ மல்லிகை ஆயிரம் ரூபாயாகவும்கனகாம்பரம் 700 ஆகவும் அதிகரித்திருந்தன. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் ஜன. 26ல் விலை அதிகரித்த பூக்கள், தற்போது வெகுவாக சரியதுவங்கி யுள்ளன. இருப்பினும் தைப்பூச விழா காரணமாக, ஓரளவு விவசாயிகள் பாதிக்கும் அளவிற்கு குறைய வாய்ப்பில்லை'' என்றார்.நேற்றைய நிலவரப்படி, மல்லிகை 350, கனகாம்பரம் 300, காக்கரட்டான் 170, சம்மங்கி 90, ஜாதிப்பூ 300, அரளி 50, ரோஜா 30 விற்றது.
குறிச்சொற்கள்: செய்திகள், திண்டுக்க்லில் மல்லிகை விலை சரிவு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது