இந்தியாவில் கடல் விவசாயம்ஏற்படுத்த மத்திய அரசு திட்டம்
8:52 AM இந்தியாவில் கடல் விவசாயம்ஏற்படுத்த மத்திய அரசு திட்டம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
உலக மீன்சந்தையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியை சமாளிக்க, இந்தியாவில் கடல் விவசாயத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மூன்று பக்கம் கடலால் சூழ்ந்த தீபகற்ப இந்தியா, உலக பிரசித்தி பெற்ற கடல்களை கொண்டுள்ளது. இருந்தும், கடல் விவசாயத்தில் கத்துக்குட்டியாக இருப்பதால், உலக மீன்சந்தையில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2008-09ல் உலகளாவிய மீன் விற்பனை ஐந்து லட்சம் கோடி ரூபாய். இதில், அதிக மீன்பிடி தொழில் கொண்ட இந்தியாவின் பங்கு வெறும் ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில், மிகச்சிறிய நாடுகளான தாய்லாந்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய், வியட்நாம் 15 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவானியை ஈட்டி உள்ளது.
இந்தியாவில் கடல் விவசாயம் இல்லாமல் போனதே, இந்த வேறுபாட்டிற்கு காரணமாகும். விலை தீர்மானிக்கும் முறையை கூட இங்குள்ள மீனவர்கள் பெறாமல் உள்ளனர். பல மீனவ கிராமங்களில் மீன்பிடிக்கான அடிப்படை வசதியே இல்லை. அப்படியிருக்கும் போது, அங்கு கடல் விவசாயம் செய்வது எப்படி? இது போன்ற பல கேள்விகள் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்நிலையை போக்க, "கடல் விவசாயத்தை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்து, மீன்பிடி தொழிலின் அன்னிய செலவானியை பெருக்க தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளுமாறு,' கடல் மற்றும் மீன் சார்ந்த ஆராய்சியாளர்களுக்கு, மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான தனிக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பீடு தயாராகி வருகிறது. முதற்கட்டமாக, தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள இம்முயற்சி, படிப்படியாக கேரளா, குஜராத் உட்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விரிவு செய்யப்பட உள்ளன. குளிரூட்டி பதப்படுத்தும் கருவி, நவீன மீன்பிடி தளம் போன்ற அத்தியாவசியத் தேவைகள், இந்த கடல் விவசாயம் மூலம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இதற்கான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. இதற்காக வெளிநாடுகளிலிருந்து பயிற்சியாளர்கள் இந்தியா வர உள்ளனர்.

குறிச்சொற்கள்: இந்தியாவில் கடல் விவசாயம்ஏற்படுத்த மத்திய அரசு திட்டம், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது