இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

டெல்டாவுக்காக இதுவரை 163 டி.எம்.சி., நீர் திறப்பு:மேட்டூர் அணை நாளை மூடல்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வழக்கம் போல நாளை (ஜன., 28) மாலை 6 மணிக்கு நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை நீரின் மூலம் டெல்டாவில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 11 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்.ஜூன் 12ல் அணையின் நீர்மட் டம் 60 அடியாக இருந்தால் பாசனத்திற்கு நீர் திறக்கவில்லை. அதனால், குறித்தபடி ஜூன்12ல் நீர் திறக்கப்படவில்லை.டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். ஜூன்12ல் நீர் திறக்கப்படாததால் 1.70 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப் பட்டது.



காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்ததால், ஜூலை12 முதல் அணை நீர்மட்டம் அதிகரித்தது. எனவே, டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை ஆக., 7ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், ஜூலை 25ல் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது.டெல்டா பாசனத்திற்கு முன்னதாக நீர்திறக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை ஏற்று, முதல்வர் கருணாநிதி உத்தரவுபடி ஜூலை 28ல் டெல்டா பாசனத் திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு நீர் திறந்து வைத்த வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், "குறுவை சாகுபடி செய்யாமல் விடப்பட்ட 1.80 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடி செய்வதன் மூலம் நெல் உற்பத்தி சமன் செய்யப்படும்' என்றார்.



ஆண்டுதோறும் ஜூன் 12ல் மேட்டூர் அணையில் நீர் திறக்கப் பட்டு, ஜன., 28ல் நிறுத்தப்படும். அதன்படி நாளை மாலை 6 மணிக்கு, மேட்டூர் அணை டெல் டா பாசன நீர் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் முதல் நேற்று வரை மேட்டூர் அணைக்கு 199 டி.எம்.சி., நீர் வந்துள்ளது.டெல்டா பாசனத்திற்கு 163 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள் ளது. கடந்த 2008 ஜூன் 12ல் நீர்மட்டம் 103 அடியாக இருந்ததால் குறித்தபடி ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. அதனால், 2008-09ம் ஆண்டில் டெல்டா பாசனத்திற்கு 192 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டது.கடந்த ஆண்டு தாமதமாக ஜூலை 28ல் டெல்டாவிற்கு நீர் திறந்ததால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 29 டி.எம்.சி., நீர் குறைவாக திறக்கப்பட்டது. அதிகபட்சமாக கடந்த செப்டம்பரில் 55.344 டி.எம்.சி., நீரும், குறைந்த பட்சமாக கடந்த ஜூலையில் 2.75 டி.எம்.சி., நீரும் பாசனத்திற்கு திறக்கப்பட்டது.நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர் மட்டம் 71.10 அடியாக இருந்தது. நீர் இருப்பு 40.089 டி.எம்.சி., அணைக்கு வினாடிக்கு 1,096 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடி நீர் சென்று கொண்டிருந்தது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment