பி.டி. கத்தரிக்காயை தடை செய்ய வேண்டும்: பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பினர் முதல்வரிடம் வலியுறுத்தல்
1:28 PM
செய்திகள்,
பி.டி. கத்தரிக்காயை தடை செய்ய வேண்டும்:
Admin
பி.டி. கத்தரிக்காயை தடை செய்ய வேண்டுமென்று பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பினர் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயினால் உடல் நலத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் முதல்வரிடம் விளக்கினர். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் திங்கள்கிழமை அவரை இந்த கூட்டமைப்பினர் சந்தித்தனர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜி. சிவராமன் தலைமையிலான இக்குழுவினர், மரபணு மாற்ற கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்புக்குப் பின் கூட்டமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மரபணு மாற்ற கத்தரிக்காயால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என பல்வேறு விளைவுகளை முதல்வர் கருணாநிதியிடம் விரிவாக எடுத்துக் கூறினோம். மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்பட சுமார் 10 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மேலும் இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களில் மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பொதுமக்களின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் கருத்துக் கேட்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசை வற்புறுத்துமாறு கோரினோம். எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்ட கருணாநிதி, இப்பிரச்னை குறித்து ஆழ்ந்து பரிசீலித்து உரிய முடிவெடுக்கப்படும் என உறுதியளித்தார்" என கூட்டமைப்பினர் தெரிவித்தனர். முதல்வருடனான இந்த சந்திப்பில் நடிகை ரோகிணி, தமிழ்நாடு பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் ஜீவானந்தம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் அரச்சலூர் செல்வம், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுத் தலைவர் ஷீலு, "ரீஸ்டோர்' அமைப்பைச் சேர்ந்த சங்கீதா ஸ்ரீராம், கூட்டமைப்பின் அமைப்பாளர் ராம் ஆகிய கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
குறிச்சொற்கள்:
செய்திகள்,
பி.டி. கத்தரிக்காயை தடை செய்ய வேண்டும்:
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
இதனைச் சார்ந்த பதிவுகள்
0
கருத்துரைகள்
-இந்த பதிவிற்கு..
Post a Comment