இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பொங்கலுக்குப்பின் கொப்பரை மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை! மந்தமாக விற்பதால் விவசாயிகள் அதிர்ச்சி

பொங்கல் பண்டிகைக்கு கொப்பரை மார்க்கெட் எதிர்பார்த்தபடி சூடுபிடிக்காமல், தற்போதும் மந்த நிலையில் உள்ளதால் பொள்ளாச்சி விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தேங்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் தற்போது உற்பத்தியாகும் தேங்காய் உணவு தேவைக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கொப்பரை உற்பத்திக்கு தேங்காய் அதிகளவில் செல்லவதில்லை. மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் விலை குறைவாக இருப்பால், கொப்பரையை காட்டிலும் தேங்காய்க்கு அதிக விலை கிடைக்கிறது.
காங்கேயம் வெளிமார்க்கெட்டில் ஜன., 16ம் தேதி நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு அதிகபட்சமாக 35 ரூபாயும், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 750 ரூபாயும், தேங்காய் பவுடர் ஒரு கிலோவுக்கு 50 ரூபாயும் விலை கிடைத்தது.
தென்னந்தோப்புகளில் ஒரு தேங்காய் 6.25 முதல் 6.50 வரையிலும் கொள்முதல் செய்யப்பட்டது. காய்ந்த தேங்காய் டன்னுக்கு 12,100 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பச்சை தேங்காய் டன்னுக்கு 10,600 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்த மார்க்கெட்டிலும், சில்லரை வர்த்தகத்திலும் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு அதிகபட்சமாக 34 ரூபாய் விலை கிடைத்தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 740 ரூபாயும், தேங்காய் பவுடர் கிலோ 49 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தென்னந்தோப்புகளில் காய்ந்த தேங்காய் டன்னுக்கு 11,200 ரூபாய் அதிகபட்சமாக விலை கிடைத்தது.
பச்சை தேங்காய்க்கு அதிகபட்சமாக 10,200 ரூபாய் விலை கிடைத்தது. ஒரு தேங்காய்க்கு 5.30 முதல் 6.00 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது ஒட்டுமொத்த தேங்காய், கொப்பரை மார்க்கெட் விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் கொப்பரை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்கு எதிர்பார்த்தபடி தேங்காய், கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை உயரவில்லை. தற்போது உற்பத்தியாகும் தேங்காய் முழுவதும் உணவு தேவைக்கு மட்டும் செல்கிறது. எண்ணெய் மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் கொப்பரை கேட்பு இல்லாத நிலை உள்ளது. கொப்பரை உற்பத்தி இல்லாத நிலையில், கேட்பும் இல்லாததால் தேங்காய் விலையும் குறைந்துள்ளது.மார்ச் மாதம் முதல் புதுத்தேங்காய் வரத்து துவங்கி விடும். இந்நிலையில் தேங்காய் மார்க்கெட் மந்தமாக உள்ளதால், அடுத்த ஆண்டும் தேங்காய் விலை பாதிக்கப்படும். தேங்காய் மார்க்கெட் பாதிக்காமல் இருக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது விவசாயிகளிடம் இருந்து கொப்பரைக்கு பதிலாக தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்யும் திட்டத்தை துவங்க வேண்டும். இவ்வாறு, கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment