இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு: ஜனவரி 26-ல் கிராம சபைகளில் தீர்மானம்





மரபணு மாற்ற கத்தரிக்காயை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் உணவுப் பயிரான கத்தரிக்காய்க்கு மத்திய அரசின் மரபணு பொறியியல் ஒப்புதல் குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதனையடுத்து பொதுமக்களின் கருத்தை அறிந்த பின்னரே மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. இதனையொட்டி இப்போது நாட்டின் பல நகரங்களில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.இதுவரை கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகள் நடந்த கோல்கத்தா, புவனேஸ்வரம், ஆமதாபாத் உள்பட எல்லா இடங்களிலுமே மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு எதிரான கருத்துகளே அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் கேரள மாநில அரசைத் தொடர்ந்து மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், குஜராத், ஆந்திரம், கர்நாடகம் என 10}க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ளன.கிராம சபையில் தீர்மானம்: இந்நிலையில் குடியரசு தினத்தன்று (ஜன. 26) இந்தியா முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. கிராம சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தீர்மானங்களுக்கு இணையாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் 26-ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.உணவு பாதுகாப்புக்கான கூட்டமைப்பு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, கோ. நம்மாழ்வார் தலைமையிலான தமிழக இயற்கை உழவர் அமைப்பு, நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு போன்ற பல அமைப்புகள் இந்த கிராம சபை தீர்மானங்களை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றன."இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருக்கும் அனைத்து ஊராட்சிகளிலும் மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்று அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் தெரிவித்தார்."மார்க்சிஸ்ட் கட்சி வலுவாக உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிச்சயம் தீர்மானம் நிறைவேற்றுவோம். பிற ஊராட்சிகளிலும் ஒருமித்த அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்ற பிரசாரம் செய்து வருகிறோம்" என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் சார்பு) பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்."எங்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் தலைவர்களாக உள்ள 78 பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்ற ஏற்பாடு செய்து வருகிறோம்" என்றார் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுத் தலைவர் ஷீலு.உண்ணாவிரதம்: காந்தியடிகள் நினைவு தினமான ஜனவரி 30}ம் தேதி மரபணு மாற்ற கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி இந்தியா முழுவதும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.கேரளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வேளாண்மை அமைச்சர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல நகரங்களில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மரபணு மாற்ற உணவுப் பொருளுக்கு எதிரான பேரணியும் சென்னையில் நடைபெற உள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment