மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டெண்டர் இன்று முதல் நடக்கிறது
8:23 AM செய்திகள், மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை 0 கருத்துரைகள் Admin
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் மக்காச்சோளம், காயவைக்கப்பட்டு விற்பதற்கு தயாரானவுடன், நேரடியாக விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்
முதல் செய்து வருகின்றனர். மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், குறிப்பிட்ட வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்ய வருவதால், மக்காச்சோளம் விலை குறைந்து வருகிறது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரு மூட்டை மக்காச்சோளம் 850 முதல் 870 ரூபாய் வரை மட்டுமே விற்றது. மக்காச்சோளம் சாகுபடிக்கு செலவு அதிகரித்த நிலையில், விலை இறங்கு முகமாக உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, வியாபாரிகளின் போட்டியை அதிகரித்து, விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் "டெண்டர்' முறை அமல் படுத்தப்பட உள்ளது. வாரம் முழுவதும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வரும் மக்காச்சோளம் இருப்பு வைக்கப்பட்டு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் டெண்டர் முறையில் ஏலம் விடப்படுகிறது.
ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மூட்டைகள் டெண்டர் முறையில் விற்பனை செய்யப்
படுவதால், பெரிய அளவில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வருகை அதிகரிப்பதோடு, ரகசிய டெண்டர் காரணமாக வியாபாரிகளின் "சிண்டிகேட்' இல்லாமல், மக்காச் சோளத் திற்கு கூடுதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் நஞ்சப்பன் கூறியதாவது : உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளதால், விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரிப்பு காரணமாக, விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் "டெண்டர்' முறையில் மக்காச்சோளம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில், திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் டெண்டர் நடத்தப்படும். முதல் டெண்டர், இன்று (ஜன., 20) நடக்கிறது. இம்முறையால், பெரிய அளவில் கொள்முதல் செய்யும் விவசாயிகள் வருகை அதிகரிப்பதோடு, விலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், விலை குறைந்தால் விவசாயிகள் இருப்பு வைத்து பயன்பெறும் வகையில், 30 ஆயிரம் மூட்டைகள் இருப்பு வைக்கும் வசதியோடு, 10 குடோன்கள் தயார் நிலையில் உள்ளது. விவசாயிகளுக்கு பொருளாதார கடன் வசதியும் செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதிகளை பயன்படுத்தி பலன் பெறலாம்.' என்றார்.
குறிச்சொற்கள்: செய்திகள், மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது