இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நலிந்த நிலையில் 22 உழவர் சந்தைகள்:முதல்வர் தகவல்

"தமிழகத்தில் மொத்தமுள்ள 148 உழவர் சந்தைகளில், 22 உழவர் சந்தைகள் நலிந்த நிலையிலும், 14 உழவர் சந்தைகள் மிகவும் நலிந்த நிலையிலும் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒரு சில இடங்களைத் தவிர, மற்ற உழவர் சந்தைகள் எல்லாம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், உழவர் சந்தைக்கு வருகை தந்த விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 671 பேர்.


மொத்தமுள்ள 148 உழவர் சந்தைகளில் மிகவும் நன்றாக 50 உழவர் சந்தைகளும், நன்றாக 23 உழவர் சந்தைகளும், ஓரளவு நன்றாக 30 உழவர் சந்தைகளும் நடைபெறுகின்றன. நலிந்த நிலையில் 22 உழவர் சந்தைகளும், மிகவும் நலிந்த நிலையில் 14 உழவர் சந்தைகளும் நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நலிந்த நிலையில் இயங்கி வரும் உழவர் சந்தைகளை அரசு மேம்படுத்தும்.உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2009ம் ஆண்டு செப்டம்பர் வரை 4,430 பேரும், அக்டோபரில் 5,377 பேரும், நவம்பரில் 5,027 பேரும், டிசம்பரில் 10 ஆயிரத்து 994 பேரும் பயனடைந்துள்ளனர்.


நவம்பர் மாதத்திற்கும், டிசம்பர் மாதத்திற்கும் இடையே, இரண்டு மடங்கு பயனாளிகள் கூடுதலாக பயனடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, இந்த மாதம் 12ம் தேதி வரை 29 ஆயிரத்து 355 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களின் சிகிச்சைக்காக, 91 கோடியே 35 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 5ம் தேதி நிலவரப்படி, காப்பீட்டுத் திட்டத்திற்கு 77 லட்சத்து 33 ஆயிரம் அடையாள அட்டைகள், கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், 52 சதவீதமான, 40 லட்சத்து 42 ஆயிரத்து 169 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விட்டன; எஞ்சிய அட்டைகளை உடனடியாக வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி, அறிக்கையில் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment