இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

'ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பில் விவசாயிகள்: ஆட்டின் விலை ரூ.50 ஆயிரம்

"ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பில் மதுரை விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காதின் நீளம் ஒரு அடி; அகலம் 10 இஞ்ச். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆண் ஆடுகள் ஐந்தடி உயரமும், பெண் ஆடுகள் நான்கடி உயரமும் வளரக்கூடியது.
வளர்ந்த ஆட்டின் குறைந்தபட்ச எடை 80 கிலோ வரை அதிகரிக்கும். ஆட்டின் கறி, மிருதுவாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் மாமிச பிரியர்களுக்கு ஜமுனாபாரி வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
ஜமுனா பிரியாணி: முன்னணி அசைவ உணவகங்களில் வான்கோழி பிரியாணிக்கு தனி மவுசு உள்ளது. இவ்வரிசையில் ஜமுனாபாரியும் இடம் பிடித்துள்ளது. ஒரு கிலோ தனிக்கறி 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கறியை விலைக்கு வாங்குவதை விட ஆட்டுக்குட்டிகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்த்தால், ஆட்டின் உரிமையாளருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் இவ்வகை ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் சுயமாகவும், கூலிக்கும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.ஏற்றுமதிக்கு உகந்தது: ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மதுரையில் வளர்க்கப்படும் ஆடுகள் சென்னை சைதாப்பேட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஆட்டின் கறியை பதப்படுத்தி "டின்'களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர். "டின்' கறிகள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் கறியும், பாலும் முக்கிய பங்கு வகிக்கிறது.



ஈத்துக்கு மூன்று குட்டி: பாலமேட்டை சேர்ந்த ஜமுனாபாரி பண்ணை மேலாளர் பட்டுராஜன், ஆடு வளர்க்கும் ராஜேந்திரன் (45) கூறியதாவது: ஜமுனாபாரி ஆடுகள் ராஜஸ்தானில் அதிகளவு வளர்கிறது. அதிக உஷ்ணத்தை தாங்கும் திறன் கொண்டது. இதனால், இதில் நோய் எதிர்ப்பு அதிகளவு உள்ளது. கறியும், பாலும் வாரம் தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைத்து ஆரோக்கியத்தை வளர்க்கும். ஒருமுறை மூன்று குட்டிகள் வரை ஈனும். 25 நாள் குட்டி ஒன்றின் விலை 6,000 ரூபாய். கருவுற்ற ஆட்டின் விலை 20 ஆயிரம் ரூபாய். பாசிப்பயிறு, துவரை, உளுந்து தூசி மற்றும் கடலை புண்ணாக்கு உணவாக வைக்கப்படுகிறது. வியாபார நோக்கமின்றி சொந்த உபயோகத்துக்காக வளர்க்கிறோம், என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment