பி.டி. கத்தரிக்காய்: போராட்டத்துக்கு கேரள அரசு ஆதரவு
6:27 AM செய்திகள், பி.டி. கத்தரிக்காய்: போராட்டத்துக்கு கேரள அரசு ஆதரவு 0 கருத்துரைகள் Admin
''ஜனவரி 30ம் தேதி அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தவுள்ள நாடு தழுவிய போராட்டத்தில் கேரள மக்கள் கலந்துகொள்ள வேண்டும். அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டின் சுகாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்'' என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
''மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு உலக சுகாதார அமைப்பும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், மத்திய அரசு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு வெளிப்படையான முறையில் செயல்படாமல் அனுமதி வழங்கியது ஏன்? அது தொடர்பான விவரங்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்'' என்றும் கேரள விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
குறிச்சொற்கள்: செய்திகள், பி.டி. கத்தரிக்காய்: போராட்டத்துக்கு கேரள அரசு ஆதரவு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது