இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பயறுவகை விளைச்சலை பெருக்க பாதுகாப்பு அவசியம் : வேளாண் உதவி இயக்குனர் தகவல்



""ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்றி பயறுவகை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்,'' என, வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயஸ்ரீ கூறினார்.



தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் 2009-10ன் கீழ் பயறுவகைகள் உழவர்வயல்வெளிப்பள்ளி பயிற்சி முகாம் காளியண்ணன் புதூரில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயஸ்ரீ பேசியதாவது:கோவை மாவட்டத்தில் 30 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, அவரை முதலியன இறவை மற்றும் மானாவாரியாகவும், ஊடுபயிராகவும் கலப்பு பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. குளிர்காலத்தில் கொண்டக்கடலை, கொள்ளு பயறுகளும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பயறு வகைகளின் பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களில் புரோடீனியா தாய் அந்து பூச்சி, இனகவர்ச்சி பொறி, புரோடீனியா புழு ஆகியவற்றின் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக காய்ப்புழுக்களினால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.



இதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். பயறு வகை பயிர்களை பயிரிடும்போது உழவியல், கைவினை, உயிரியல், இரசாயனம் உள்ளிட்ட நான்கு முறைகளை தெரிந்து கொண்டு நோய், களை, நூற்புழு நிர்வாகங்களை அறிந்து பயிரிட்டால் பயறுவகை பயிர்களில் அதிக லாபம் பெறலாம்.இந்த முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்திட வாரம் இருமுறையென 20 வகுப்புகள் நடக்கும் பயறுவகைகள் உழவர்வயல்வெளிப்பள்ளி பயிற்சி முகாமில் பங்கேற்று பயன் அடையலாம்.இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயஸ்ரீ கூறினார். இதில், வேளாண் அலுவலர் கவிதா, அன்பழகி, உதவி வேளாண் அலுவலர்கள் முருகன், பாரதி, சிவகுமார், ஜெயபிரகாஷ், உதவி விதை அலுவலர் மோகன சுந்தரம் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment