இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பூனைக்கு யார் மணி கட்டுவது ?

இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பார்வையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைத் தவிர வேறு மாநிலங்களில் விவசாயம் நடைபெறுவதே தெரியாது. அவர்களது ஆராய்ச்சிப்பணிகளும் இம்மாநிலங்களை ஒட்டியே இருக்கும். ஆனால் உண்மையில் அரிசி உற்பத்தியில் தமிழகமும் ஆந்திரமும் தான் பெரும் பங்கு ஆற்றுகின்றன. தோட்டக்கலைப்பயிர்களில் கர்னாடகம் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பாராமுகம் பரந்த முகமாக மாற வேண்டும்.

நாம் எப்போதும் அரசாங்கத்தைக் குறை கூறி வருகிறோம். அதில் உண்மையும் உள்ளது. கொள்கை அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். உதாரணமாக, விவசாயிகளின் தேவையான கடன் நிதி அமைச்சகத்தின் கையில் உள்ளது. உரமோ, உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கையில் உள்ளது. மதிப்பு கூட்டுதலோ தனி அமைச்சகத்தின் கையில் உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளோ ஊரக வளர்ச்சித்துறையிடம் உள்ளது. நீர் நிலைகளோ, நீர்ப்பாசன அமைச்சரிடம் உள்ளது. காடு வளர்ப்போ தனி அமைச்சகத்திடம் உள்ளது. ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் இதற்கு விடிவு கிடைக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது ?

-கபீர்
வேளாண் ஆலோசகர்
தாராபுரம்

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment