மக்காச்சோள விளைச்சல் குறைவு விவசாயிகள் வேதனை
2:40 AM செய்திகள், மக்காச்சோள விளைச்சல் குறைவு விவசாயிகள் வேதனை 0 கருத்துரைகள் Admin
பல்லடம்: பல்லடம் தாலுகாவில் கடந்த மாதம் விட்டு, விட்டு பெய்த தொடர் மழையால் மக்காளச் சோளம் ஏக்கருக்கு ஐந்து குவிண்டால் வரை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.பல்லடம் தாலுகாவில் பல்லடம், சித்தம்பலம், அய்யம்பாளையம், பொங்கலூர், மாதப்பூர், உகாயனூர், கேத்தனூர், குள்ளம்பாளையம், மந்திரிபாளையம், காட்டூர், கள்ளிப்பாளையம், கொடுவாய், புத்தெரிச்சல், எலவந்தி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 9,000 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
120 நாள் பயிரான மக்காச் சோளம் ஒரு ஏக்கர் சாகுபடி செய்து அறுவடை வரை விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடித்தது.கடந்த மாதம் பல முறை பல்லடம் தாலுகாவில் மழை, விட்டு, விட்டு பெய்ததில் மக்காச்சோளம் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக பல விளைநிலங்களில் மக்காச்சோளம் கதிர்களில்( பூட்டை) முழு அளவில் சோளம் பிடிக்காமல் முக்கால் பகுதி அளவு மட்டுமே பிடித்து இருந்தன.மேலும்,சோளம் திண்ணம் இல்லாமல் பிடித்தன. இதுபோக ஒரு சில பகுதிகளில், விளைநிலங்களில் உள்ள கதிர்களில் மழையால் வெள்ளைசோளம் ஏற்பட்டது. கடந்த காலங்களில் ஏக்கருக்கு சாதாரணமாக 27 முதல் 30 குவிண்டால் மகசூல் இருந்தது. ஆனால், கடந்த மாதம் பெய்த மழையில் பாதிக்கப்பட்டதால், இப்பருவத்தில் ஏக்கருக்கு 22 குவிண்டால் அளவிற்கு மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.குவிண்டாலுக்கு 900 ரூபாய் கொள்முதல் விலை கிடைத்துவரும் நிலையில், ஏக்கருக்கு ஐந்து குவிண்டால் வரை மகசூல் குறைந்து வருமானத்தில் 4,500 ரூபாய் வரை நஷ்டம் ஏற் பட்டுள்ளது. இதனால், பல்லடம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
குறிச்சொற்கள்: செய்திகள், மக்காச்சோள விளைச்சல் குறைவு விவசாயிகள் வேதனை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது