இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வேளாண் பொருளாதார அமைப்பு தலைவராக முன்னாள் துணைவேந்தர் நியமனம்




இந்திய வேளாண் பொருளாதார அமைப்பின் தலைவராக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.ராமசாமி (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலை.யில் அண்மையில் நடைபெற்ற வேளாண் பொருளாதார அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டார். 3 ஆண்டுகள் இப் பதவியில் இருப்பார்.வேளாண் பொருளியல் கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிகளை ஊக்குவித்து வருகிறது. சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களுக்குப் பரிசுகளை அளிக்கிறது.சர்வதேச வேளாண் பொருளியல் அமைப்பின் முக்கிய அங்கமாக இவ்வமைப்பு உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார நிபுணர்கள் மான்டேக் சிங் அலுவாலியா, சி.ரங்கராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய திட்டக் குழு, நபார்டு வங்கி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியன இந்த அமைப்புக்கு நிதியுதவி அளிக்கின்றன.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment