இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஈரோடு:வெல்லம் மூட்டைக்கு ரூ.100 உயர்வு

பொங்கல் பண்டிகை நெருங்கியதால் வெல்லம் விலை மூட்டைக்கு 100 ரூபாய் அதிகரித்துள்ளது.ஈரோட்டில் முள்ளாம்பரப்பு, அம்மாபேட்டை, வடபழனி, பிழிக்கல்பாளையம் ஆகிய இடங்களில் வெல்லமும், கோபி, கவுந்தப்பாடி, அலங்கியம், பவானி ஆகிய இடங்களில் நாட்டு சர்க்கரையும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவை கவுந்தப்பாடி, சித்தோடு ஆகிய இரு சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

சென்றாண்டு ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுப் பொருளுக்காக தமிழக அரசு சார்பில் வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டிலும் அரசு சார்பில் வெல்லம் கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் வெல்லம் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. ஆனால், அரசு சார்பில் வெல்லம் கொள்முதல் செய்யப்படவில்லை.சில வாரங்களாக வெல்லம் ஒரே சீரான விலையில் விற்கப்பட்டது.



பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால் வெல்லம், சர்க்கரை தேவை அதிகரித்துள்ளது. வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றின் விலை மூட்டைக்கு 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.நேற்று 1,500 முதல் 1,580 வரை விற்கப்பட்ட 60 கிலோ கொண்ட நாட்டு சர்க்கரை மூட்டை 1,550 ரூபாய் முதல் 1,600 ரூபாயாகவும், 860 ரூபாய்க்கு விற்ற 30 கிலோ உருண்டை வெல்லம் 930 ரூபாய் முதல் 970 ரூபாயாகவும், 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட 30 கிலோ அச்சு வெல்லம் 1,100 ரூபாயாக உயர்ந்துள்ளது.



கவுந்தப்பாடி, சித்தோடு மார்க்கெட்டில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளுக்கு தினசரி 25 லோடு முதல் 30 லோடு வரை சென்றன. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தற்போது 40 லோடுகள் செல்கின்றன.வெல்லம் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:சித்தோடு மற்றும் கவுந்தப்பாடி வெல்லம் மார்க்கெட்டுக்கு வெல்லம் அதிகளவில் வரத்தானதால் விலை சில வாரங்களாக சீராக இருந்தது. பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால் வெல்லம் தேவை அதிகரித்துள்ளது.



வெல்லம், நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் ஆகியவற்றின் விலை மூட்டைக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது.தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு ஈரோடு மார்க்கெட்டில் இருந்து வெல்லம் அனுப்புவது அதிகரித்துள்ளது. தினசரி 30 லோடு வெல்லம் அனுப்புவது, தற்போது 40 லோடாக உயர்ந்துள்ளது.



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரை சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். வெல்லம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தேவையான அளவு வெல்லம் இருப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment