திண்டுக்கல்:விவசாய கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு
7:26 AM செய்திகள், திண்டுக்கல்:விவசாய கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு 0 கருத்துரைகள் Admin
ஜன., 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை திண்டுக் கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விவசாய கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் வள்ளலார் அழைப்பு விடுத்துள்ளார்.திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: இன்டர்நெட் மூலம் அனைத்து ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளது. இந்த பணி முடிந்ததும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை ஊராட்சியில் இருந்த படியே கலெக் டரிடம் வழங்க முடியும். பதில்களும் இன்டர்நெட்டிலேயே வழங்கப்படும். திண்டுக்கல் டட்லி மேல்நிலைபள்ளியில் ஜன., 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை விவசாய கண்காட்சி நடக்கிறது.
குறிச்சொற்கள்: செய்திகள், திண்டுக்கல்:விவசாய கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது