கால்நடை வளர்ப்பு முறை விவசாயிகளுக்கு பயிற்சி
8:36 PM கால்நடை வளர்ப்பு முறை விவசாயிகளுக்கு பயிற்சி, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
காட்பாடி : விஐடி பல்கலையில் நிலையான ஊரக வளர்ச்சி, ஆராய்ச்சி கல்வி மையம் மற்றும் வேலூர் வனவியல் விரிவாக்கம் மையம், வேலூர் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கம் ஆகியவை இணைந்து "கால்நடை வளர்ப்பு' முறைகள் பற்றி விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பள்ளிகொண்டா வனவியல் விரிவாக்கம் பயிற்சி மையத்தில் நடத்தியது.கால்நடை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் தியோபிலஸ் ஆனந்தகுமார், பண்ணைகள் பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள், கால்நடை தீவனங்கள் தயாரிக்கும் முறைகள், சினை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியன பற்றி பட விளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
நபார்டு வங்கி மாவட்ட துணை பொது மேலாளர் சுரேஷ் , இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மைய இயக்குநர் ஜெகன்நாதன், வனவியல் விரிவாக்கம் அலுவலர் பொன்னுரங்கம் ஆகியோர், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன்கள் பற்றி விளக்கம் அளித்தார். உலக வெப்பமயமாதல் பற்றியும், காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.இதில் பள்ளிகொண்டா, பசுமாத்தூர், வெட்டுவானம், கொல்லமங்கலம், அக்ராவரம், பள்ளிகுப்பம், வேப்பூர், ஒடுக்கத்தூர், ஓலவாசி விவசாயிகள் மற்றும் மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர்.மாவட்ட மரம் வளர் போர் சங்க தலைவர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
குறிச்சொற்கள்: கால்நடை வளர்ப்பு முறை விவசாயிகளுக்கு பயிற்சி, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது