இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

திருவாரூர் :உளுந்து, பயறு விதைகள் வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகளுக்குத் தேவையான உளுந்து, பச்சைப்பயறு தானிய விதைகளை வேளாண் துறை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



இதுகுறித்து சங்க மாவட்டச் செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணை திறக்கப்படாததாலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்தது. இந்நிலையில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் நெற்பயிர் பால்பிடிக்கும் பருவத்தில் தண்டு முறிந்து விழுந்து விட்டது.பூ பூத்து நெல்மணியாக வேண்டிய சூழலில் மழையும், காற்று அடித்ததால் நெற்பயிர் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. வேளாண் துறையினர் மழைக்காலத்தில் வயல்வெளி சென்று உரிய தொழில்நுட்ப மேலாண்மையை வழங்காததால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பாதிப்புகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வேண்டும். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உளுந்து மற்றும் பச்சைப்பயிறு தானிய விதைகளை தரமான முறையில் உரிய காலத்தில் வழங்க வேண்டும்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment