சேலம் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு
8:29 PM செய்திகள், சேலம் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு 0 கருத்துரைகள் Admin
சேலம்: தேவை அதிகரிப்பு, வரத்து குறைவு ஆகிய காரணங்களால், சேலம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. மார்கழி விரதம் காரணமாக, அனைத்து ஊர்களிலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதேவேளையில், மழை, பனிப்பொழிவு காரணமாக, தமிழகம், பிற மாநிலங்களில் காய்கறி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் மாநிலம் முழுவதும் காய்கறி விலை உயர்வை சந்தித்துள்ளது. சேலத்தில் கடந்த வாரத்தில் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற நாட்டுத் தக்காளி நேற்று 22 ரூபாய்க்கு விற்றது. பெங்களூரு தக்காளி விலை, கிலோவுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து, 24 ரூபாய்க்கு விற்கிறது.
கடந்த வாரம் கிலோ 18 ரூபாய்க்கு விற்ற உருளைக்கிழங்கு தற்போது 22 ரூபாய்க்கும், 14 ரூபாய்க்கு விற்ற கேரட் 16 ரூபாய்க்கும் நேற்று விற்பனை ஆனது. சென்ற வாரம் ஒரு ரூபாய்க்கு விற்ற முருங்கைக்காய் நேற்று இரண்டு ரூபாய்க்கு விற்றது. பச்சை மிளகாய் 10 ரூபாய்க்கு விற்றது கிலோ 12 ரூபாய்க்கும், பீட்ரூட் கிலோ 16 ரூபாய்க்கு விற்றது 18 ரூபாய்க்கும், சவ்சவ் கிலோ 25 ரூபாய்க்கு விற்றது 32 ரூபாய்க்கும் விற்கிறது.பீன்ஸ் வரத்து முற்றிலும் நின்று விட்ட நிலையில், தற்போது குளிர்பதன கிடங்குகளில் இருப்பில் இருந்த பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது. அவற்றின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பீன்ஸ் கிலோ 26 ரூபாய்க்கு விற்றது தற்போது 33 ரூபாய்க்கு விற்கிறது.

குறிச்சொற்கள்: செய்திகள், சேலம் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது