இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விதைகளுக்கு தட்டுப்பாடு ஆலங்குடியில் சாகுபடி பாதிப்பு

ஆலங்குடி: ஆலங்குடி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விதைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பகுதியில் கடலை சாகுபடி மிகவும் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற பகுதியாகும். ஒவ்வொரு முறையும் விதை கடலையை இருப்பு வைத்தும், அவ்வபோது வெளிசந்தையில் விதை கடலையை வாங்கி விதைக்கப்படுகிறது. தற்போது பெய்த மழையால் நிலங்களை உழுது விதைக்க விதைக்கடலை வெளிச்சந்தையை விட அரசு மையங்களில் குறைந்த விலைக்கும், தரமானதாகவும் கிடைக்கும் என்பதால் பருவமழை ஓய்ந்தும் அரசு வேளாண் மையங்களில் விதை கடலை மற்றும் இதர தானிய வகை விதைகள் வாங்க விவசாயிகள் குவிந்தனர்.

ஆனால், விதைகள் தற்போது இருப்பு இல்லை. பின்னர் வந்தவுடன் தருகிறோம் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு போன்ற இதர பகுதி விவசாயிகள் அலைக்கழிக்கபடுவதால் சில விவசாயிகள் அதிக விலைகொடுத்து வெளிசந்தையில் விதைகளை வாங்கி விதைத்தனர். விவசாயிகள் சாகுபடிக்குத் தயாராக உள்ள போதே அரசு தடையின்றி கடலை மற்றும் தானிய விதைகள் வேளாண் மையங்களில் போதிய இருப்பு வைத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
இந்தியாவில் விவசாயம் அதிகளவில் உள்ளது என அரசு அறிவித்தும் தற்போது நல்ல மழை இருந்தும் அரசு தரமான விதை வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை தேவையென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment