இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கோலியாஸ் கிழங்கு பயிர் சாகுபடி தீவிரம்

சின்னசேலம்:சின்னசேலம் பகுதிகளில் கோலியாஸ் மருத்துவ குணம் கொண்ட கிழங்கு பயிர் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.சின்னசேலம் அடுத்த நரிக்குறவர் காலனி, நைனார்பாளையம், செம் பாக் குறிச்சி மற்றும் சுற்று பகுதிகளில் கோலியாஸ் மருத்துவ குணம் கொண்ட கிழங்கு பயிரை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.

இந்த கிழங்கின் வளர்ச்சி பருவம் 180 நாட்களாகும். இதற்கு அதிகமான நீர் தேவையில்லை. இப்போதுள்ள பருவ நிலையில் இப்பயிர் செழித்து வளர்கிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கோலியாஸ் உற்பத்தியாகும். பருவ நிலை நன் றாக இருப்பதால் அதிகளவில் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.இம்மருத்துவ குணம் கொண்ட கிழங்கு ஒரு டன் 10 ஆயிரம் ரூபாயும், தண்டு பகுதிக்கு ஒரு டன் 2000 ரூபாய் அளவிலும் விற்கிறது. ஒரு ஏக்கருக்கு அரை டன் அளவு அதிகம் விளைச்சல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இம்மருத்துவ குணம் கொண்ட கிழங்குகள் பெங்களூருவிலிருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த கிழங்கு மனித உடலில் இதயம், கணையம், கிட்னி போன்ற பகுதிகளுக்கு தேவைப்படும் மருந்தாக பயன்படுகிறது. இக்கிழங்கை சேலம் மாவட் டத்தில் உள்ள தனியார் நிறுவனம் கொள்முதல் செய்து பெங்களூருவிற்கு அனுப்புகிறது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment