இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கரும்பு பயிரை குரங்குகளிடமிருந்து காப்பாற்ற...புது யுக்தி: மாட்டு எலும்பு தோரணம் கட்டும் விவசாயிகள்

தியாகதுருகம்:ரிஷிவந்தியத்தில் குரங்குகளின் எண் ணிக்கை அதிகமாகி உணவுக்காக கரும்பு பயிர்களை சேதப்படுத் துவது அதிகரித்துள்ளது. இதனால் வயலை சுற்றி மாட்டு எலும்புகளை தோரணமாக கட்டி குரங்குகளை விரட்ட புது யுக்தியை விவசாயிகள் கையாண்டு வரு கின்றனர்.ரிஷிவந்தியத்தில் குரங் குகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக் கில் குரங்குகள் உள்ளதால் உணவுக்கு வீடுகளில் புகுந்து சூரையாடுவது வாடிக்கையாக நடக்கிறது. இவைகளுக்கு ஊரில் உணவு கிடைக்காத போது ஒதுக்குபுறமாக உள்ள வயல்வெளிகளுக்கு சென்று சாகுபடி செய் துள்ள உளுந்து, கரும்பு பயிர்களை சேதப்படுத்து கின்றன. முக்கியமாக கரும்பு பயிரின் நுனி குருத்தை கடித்து சேதப் படுத்துவதால் வளர்ச்சி தடைபட்டு மகசூல் பாதிக் கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கரும்பு வயலுக் குள் குரங்கு புகுந்து சேதப் படுத்தாமல் இருக்க பட் டாசுகளுடன் பகல் முழுவதும் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.


குரங்கை அடித்து விரட் டாமல் அவைகளாகவே விளைநிலங்களுக்கு வரமால் ஒதுங்கி செல்ல விவசாயிகள் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர். மாட்டிறைச்சி கடைகளுக்கு சென்று வெட்டும் மாடுகளின் எலும்புகளை விலைக்கு வாங்கி அவற்றை தோரணமாக கரும்பு வயலை சுற்றி கட்டி விடுகின்றனர்.அதை பார்க்கும் குரங் குகள் கரும்பு வயலுக்கு செல்ல பயந்து ஒதுங்கி ஓடி விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின் றனர். சாகுபடி செய்த பயிரை குரங்குகளிடமிருந்து பாதுகாக்க "மாட்டு எலும்பு தோரணம்' விவசாயிகளுக்கு பெரிதும் உதவுகிறது.



வனப்பகுதியில் குரங் குகளுக்கு உணவு கிடைக் கும் வகையில் பழ மரங் களை நட்டு பாதுகாத்தல், ஊருக்குள் புகுந்து வீட்டில் உள்ள உணவு, சாகுபடி செய்த விளைபொருட்களை சேதப்படுத்துவது தவிர்க்கப்படும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.சமூக காடுகள் திட்டம் என்ற பெயரில் காட்டில் இயற்கை மரங்களை அழித்து விட்டு வருவாய் ஈட்டித்தரும் யூக்கலிப்டஸ் மரங்களை வளர்த்து வரும் வனத்துறையினர், அங்கு வாழ்ந்த விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய பழ மரங் களை நட்டு பராமரிக்க முன் வர வேண்டும்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment