இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விருதுநகர்:மாவட்டத்தில் 18,600 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி

விருதுநகர் மாவட்டத்தில் 18,600 எக்டர் நிலப் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் சீதோஷணத்தால் நெற்பயிரில் புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக காற்றின் ஈரப்பதம் 91 முதல் 99 சதவீதம் இருந்து வந்தாலும், இலைகளில் தொடர்ந்து ஈரப்பதம் காணப்படுவதாலும், அதிகளவு தழைச்சத்து உரம் இடுவதாலும் புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட விதைப்பதற்கு முன்பாக விதைகளை சூடோமோனாஸ் புளூரசன்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது இத்தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் புகையான் தாக்குதல் தென்பட்டால், மான்கோசெப் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அல்லது டிரைசைக்லோசோல் 75 சதவீதம் நனையும் துகள் மருந்தினை லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவிலும் நீரில் கலந்து கைத்தெளிப் பான் மூலம் தெளிப்பதால் புகையான் தாக்குதலினை கட்டுப்படுத்தலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment