'செம்மை நெல்' சாகுபடியில் உற்பத்தி இல்லை : விவசாயிகள் புகார்
6:05 AM 'செம்மை நெல்' சாகுபடியில் உற்பத்தி இல்லை : விவசாயிகள் புகார், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத் தில் பருவம் கடந்து நடவு செய்ததால் செம்மை நெல் சாகுபடியில் உற்பத்தி கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பருவமழை பின் தங்கியதால் காலம் கடந்து பயிர் செய் யப்பட்ட செம்மை நெல் சாகுபடியில் உற்பத்தி இல்லாத நிலை ஏற்பட் டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சேத்தூர், தேவதானம், சோலைச்சேரி பகுதிகளில் 200 ஏக்கரில் ஜே.சி.எல் ரக நெல் விதைகளை விவசாயிகள் விரிவாக்க மையத்தில் பெற்று செம்மை நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் பயிர் செய்திருந்தனர். இதில் ஒரு கொத்தாக நெல் நாற்றுகள் நடவு செய்ததில் 40 க்கும் மேற்பட்ட தூர்கள் உருவாகியிருக்க வேண்டும். தற்போது ஒரு கொத்தாக நடவு செய்ததில் 7 முதல் 10 தூர்கள் மட்டுமே உள்ளது. 40 நாட்களில் கதிர் உருவாக வேண்டிய நேரத்தில் கதிர்கள் பிடிக்காமல் தரமற்ற சாவி நெல் கதிர்களாக உள்ளது. இதனால் விவசாயிகள் நெல் நடவு செய்து பணம் செலவு செய்தும் போதுமான விளைச்சல் இல்லாத நிலையில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாய அதிகாரிகளிடம் கேட்ட போது, "விவசாய ஆய்வு மையத்தில் கேட்டு தான் பதில் தர முடியும்' என்கின்றனர்.
மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இதே நிலை தான்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரராஜா என்பவர் கூறுகையில், " விவசாயிகள் அரசு விவசாய விரிவாக்க மையங்களில் தான் விதை நெல் வாங்கி நடவு செய்துள்ளனர். பருவம் தாண்டி பயிர் செய்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர். பயிர் செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
குறிச்சொற்கள்: 'செம்மை நெல்' சாகுபடியில் உற்பத்தி இல்லை : விவசாயிகள் புகார், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது