இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வேளாண் காப்பீடு திட்ட தேதி நீட்டிக்க வேண்டும் புதுகை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள்

புதுக்கோட்டை: "புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்துக்கான தேதியை நீட்டிக்கவேண்டும்' என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சுகந்தி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராகவன், திட்ட அலுவலர் குமார் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:


முத்துக்குமரன்(விவசாயி): புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கமாக பெய்யவேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதாலும், பருவம் தவறி மழை பெய்துள்ளதாலும் பயிர் சாகுபடி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்துக்கான தேதியை மேலும் நீட்டிக்கவேண்டும்.


ராகவன்(டி.ஆர்.ஓ.,): சம்பா நெல் சாகுபடிக்கு மட்டும் தான் டிசம்பர் 15ம் தேதியுடன் காப்பீட்டு தேதி முடிந்துள்ளது. இதர பயிர்களை 2010 ஜனவரி 15ம் தேதிவரை காப்பீடு செய்யலாம். காமராசு(விவசாயி): தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தென்னை மரங்களையும் இணைக்கவேண்டும். கேரளாவில் தென்னை மரங்கள் தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.


கலெக்டர்: இதுகுறித்து உரிய விசாரணை நடத்தியபின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.


ராமகிருஷ்ணன்(விவசாயி): இலுப்பூர் தாலுகா நிலையப்பட்டி கிராமத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து 800 ஏக்கர் விளைநிலத்தில் ஆண்டாண்டு காலமாக பயிர் சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு அவரவர் நிலங்களுக்கு உண்டான பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்துவருகின்றனர்.


கலெக்டர்: பயிர் சாகுபடி செய்துவரும் நிலம் தனக்குத்தான் சொந்தம் என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்படும்.


ஆசைத்தம்பி(விவசாயி): கந்தர்வக்கோட்டை அடுத்த கல்லாக்கோட்டை கிராமத்தில் அண்மையில் திறக்கப்பட்ட "ஹால்ஸ் டிஸ்லரிஸ்' என்ற மதுபான கம்பனிக்குள் போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை, திறன் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டும் பாதிக்குமா என்பது குறித்த முழு தகவல்களையும் மாவட்ட நிர்வாகம் வெளியிடவேண்டும்.


டி.ஆர்.ஓ.,: இதுகுறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டபின் தகவல் வெளியிடப்படும்.


கண்ணுத்துரை(விவசாயி): மாவட்டம் முழுவதும் இடைவிடாது பலத்த மழை பெய்தும் முத்துக்காடு கிராமத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. வரத்துவாரிகள் மாயமானதால் தான் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. வரத்துவாரிகளில் ஆக்ரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.


தங்கசாமி(விவசாயி): வனத்துறையின் அனுமதியின்றி சந்தணம் மற்றும் வெண் தேக்கு மரங்கள் நடவு செய்யலாமா?


கலெக்டர்: மரங்கள் நடவு செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை. அவற்றை வெட்டுவதாக இருந்தால் அனுமதி பெறவேண்டும்.


முத்துக்குமரன்: கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் உறுப்பினர்களாக சேர காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும்.


ராகவன்(டி.ஆர்.ஓ.,): மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


காமராசு(விவசாயி): தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து பிரிமியத் தொகை வாங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மறுத்துவருகிறது.


கலெக்டர்: எந்த வங்கி வாங்க மறுத்துள்ளது என்பதை குறிப்பிட்டு சொன்னால் அந்த வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலம் தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரிமியத் தொகை செலுத்தலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment