இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஹெக்டேருக்கு ரூ.30,000 மழை நிவாரணம்: விவசாயிகள் சங்கம் அமைச்சரிடம் மனு

காரைக்கால் : காரைக்காலில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட வருகை தந்த சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியிடம் காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவின் விபரம் வருமாறு .காரைக்காலில் 10 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால்,நடவு செய்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் முழ்கி பலத்த சேதம் அடைந்து விட்டன. ஏறக்குறைய 5800 ஹெக்டேரில் நடவு செய்த நெற்பயிர்கள் இந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 50 ஹெக்டேரில் விதைகள் தெளித்திருந்த தாளடி மற்றும் பின்பட்ட சம்பா நாற்றுகள் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்து விட்டன.


100 ஹெக்டேரில் அறுவடைக்குத் தயாராக இருந்த முன்பட்ட சம்பா நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து விட்டன.350 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட இளநடவு சம்பா பயிர்களும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்து விட்டது. மீதமுள்ள சம்பா நெற்பயிர்களும் தொண்டை கதிர் பக்குவத்தில் உள்ளதால் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தொடர் மழை, விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் எற்படுத்தியுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment