ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்
6:08 AM ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
திருத்துறைப்பூண்டி: கடந்த பல ஆண்டாக தொடர்ந்து டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. அப்போது, ஆறு, வடிகால், வாய்க்கால், குளங்களில் ஆகாயத்தாமரை படர்ந்து வளர்ந்து மழைநீரை வடியவிடாமல் தடுக்கிறது. இதனால், பல ஆயிரம் ஏக்கரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் உற்பத்தி, விவசாயம் முழுமையாக பாதிக்கப்படுவதுடன், பெருமளவில் விவசாயிகள் பாதிக்கின்றனர். ஆகாயத்தாமரை படர்ந்துள்ள குளங்களில் கொசு உற்பத்தி அதிகமாகி, நோய் பரவும் அபாயம் தொடர்ந்து இருந்து வருகிறது. பல கோடி ரூபாய் வெள்ள நிவாரணமாக, பயிர் இழப்பீடாக வழங்கி வரும் அரசு, போர்க்கால அடிப்படையில் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ஆகாயத்தாமரையை அகற்ற ஒரு திட்டத்தை தற்போது உருவாக்கி, ஜனவரி, ஃபிப்ரவரி மாதத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி நடக்கும் கிராமங்களில் இத்திட்டத்திலும், இத்திட்டம் இல்லாத பகுதிகளில் ஒரு சிறப்பு திட்டத்தையும் வகுத்து, அந்தந்த பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் குழு அமைத்து அகற்ற வேண்டும்.
அகற்றும் ஆகாயத்தாமரையை கம்போஸ் உரமாக மாற்றுவதால், அது இயற்கை உரமாக மாறிவிடுகிறது. மேலும், இதை உரமாக மாற்றுவதால், பின்னர் இவை முளைக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது. அல்லது எவ்வளவு தூரம் வெட்டினாலும், அவை குப்பையாக கொட்டப்படும் இடத்தில் மீண்டும் முளைத்துவிடும். வரும் ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

குறிச்சொற்கள்: ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது