எண்ணெய் வித்து சாகுபடி பயிற்சி முகாம்
10:53 PM எண்ணெய் வித்து சாகுபடி பயிற்சி முகாம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
ஈரோடு: அம்மாப்பேட்டை அருகே எண்ணெய் வித்துபெருக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. அம்மாப்பேட்டை அருகேயுள்ள மாத்தூரில் "ஐசோடாம்' எண்ணெய் வித்து பெருக்கு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. உழவர் ஆர்வலர் குழுத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் திருமூர்த்தி, உதயகுமார், வேளாண் அலுவலர் ராமசந்திரன் ஆகியோர் எண்ணெய் வித்து பயிர்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்தும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்தும் பேசினர்.
ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல், நுண்ணூட்டமிடுதல், உயிர் உரமிடுதல் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. விவசாயி முருகேசன் நிலக்கடலை வயலில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பற்றி விளக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் சுகுமார், ராஜேந்திரன், செல்வராஜ், பழனிச்சாமி ஆகியோர் செய்தனர்.
குறிச்சொற்கள்: எண்ணெய் வித்து சாகுபடி பயிற்சி முகாம், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது