இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

என்.எல்.சி., சுரங்க நீர் வெளியேற்றத்தால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே துரிஞ்சிக் கொல்லை பகுதியில் மழை நீருடன் என்.எல்.சி., நிறுவனத்திலிருந்து வெளியேற்றிய கழிவு நீரும் சேர்ந்ததால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் பெய்த கனமழையால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சேத் தியாத்தோப்பு அடுத்த துரிஞ்சிக் கொல்லை, மதுவானமேடு, நெல்லிக் கொல்லை, பின்னலூர் பகுதியில் மழை நீரோடு பரவனாறு வாய்க்கால் வழியாக என்.எல்.சி., சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் சேர்ந்ததால் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை விட்டு 2 நாள் ஆகியும் தண்ணீர் வடியாததால் பயிர்கள் முழுவதுமாக அழுகி விடும் என்பதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் இது போன்ற இன்னலை இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பவித்து வருவதால் தமிழக அரசும், என்.எல்.சி., நிறுவனமும் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment