இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு

செம்பரம்பாக்கம்: தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நீர் வருகையின் காரணமாக செம்பரம் பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக நிரம்பி வருகிறது. மழைக்கு முன் வறண்டு காணப்பட்ட இந்த ஏரி, தற்போது 17 அடி நீர்மட் டத்தை எட்டியுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில், தற்போது 1,890 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 660 கனஅடி. இதில், பூண்டியில் இருந்து 100 கனஅடி கிருஷ்ணா நீர் "லிங்க்' கால்வாய் மூலம் செம்பரம்பாக்கத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று, ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 10 மி.மீ., மழை பதிவானது. தற்போதைய நீர் இருப்பே அடுத்த கோடை வரை சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மழை நீடிக்கும் பட்சத் தில், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment