விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
10:57 PM செய்திகள், விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் 0 கருத்துரைகள் Admin
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் சார்பில் உழவர் விவாத குழு அமைப்பாளருக்கு மாவட்ட அளவிலான இரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. வளாண் உதவி இயக்குனர் விடுதலை தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களை கையாளுதல், மீன் வளர்த்தல், பட்டா நிலங்களில் ந்தனமரங்களை நட்டு வளர்த்தல் மற்றும் கால்நடை பராமரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், கால்நடைபராமரிப்பு துறை மருத்துவர் சரவணகுமார் மற்றும் உழவர் விவாத குழு மாவட்ட தலைவர் ராமகவுண்டர், செயலாளர் லோகாபிராம், மணிமேகலை, மற்றும் கோவிந்தசாமி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறிச்சொற்கள்: செய்திகள், விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது