கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை
10:52 PM கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
அரியலூர்: கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க ஆலைக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூரில் கோத்தாரி சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பன்னீர் செல்வம், விஸ்வநாதன், விஜயகுமார், ராஜாசிதம்பரம், ஜேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோத்தாரி சர்க்கரை ஆலை கடந்த ஆண்டிற்கான நடவு கரும்பிற்கு ரூ.3 ஆயிரத்து 750, கட்டை கரும்பிற்கு ரூ. ஆயிரமும் மானியம் வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது வெட்டும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரத்து 610 விலை அறிவித்துள்ளது.
நிர்வாகம் அறிவித்துள்ள மானியம் நடவு கரும்பிற்கு அதிகமாகவும், கட்டை கரும்பிற்கு குறைவாகவும் உள்ளது. அதிக டன் கரும்பு வெட்டும் விவசாயிகளுக்கு குறைந்த தொகையும், குறைந்த டன் கரும்பு வெட்டும் விவசாயிகளுக்கு அதிக தொகையும் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அறிவித்துள்ள மானிய தொகையினையும், கரும்பு விலை ரூ. ஆயிரத்து 610 என்பதையும் திரும்ப பெற்று அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரி விலை கிடைக்கும் வகையில் டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிச்சொற்கள்: கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது