நெல் பயிரில் தண்டு துளைப்பான் புழு தாக்குதல்: விவசாயிகள் அச்சம்
10:52 PM செய்திகள், நெல் பயிரில் தண்டு துளைப்பான் புழு தாக்குதல்: விவசாயிகள் அச்சம் 0 கருத்துரைகள் Admin
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட் டுள்ள "பிபிடி' எனப்படும் "பப்பட்லால்' ரக நெல் பயிர் தண்டு துளைப்பான் வகை புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஏக்கர் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் அதிக விலை கிடைக்கும் "பிபிடி' எனப்படும் "பெபட்லால்' ரக நெல் பயிரிட்டுள்ளனர்.ஆனால் மகரந்த சேர்க்கை சரியான அளவில் இல்லாததால் முழு அளவில் கதிர்கள் வரவில்லை இதனால் 50 ஏக்கர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில் தற்போது இவ்வகை பயிர் "தண்டு துளைப்பான்' என்ற புழுவால் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வகை புழுக்கள் பயிர்களை முழு அளவில் தாக் கும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இதற்கு என்ன மருந்து தெளிப்பது எனவும் தெரியாமல் குழப்ப நிலையில் உள்ளனர்.இதனை போக்க வேளாண் துறை அதிகாரிகள் பயிர் வகைகளை நேரில் சென்று ஆய்வு செய்து என்ன வகையான மருந்தை தெளிக்கலாம் என்பது குறித்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் எதிர் பார்க்கின்றனர். வேளாண் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நெல் பயிர்களை காப்பாற்ற வேண்டும்.
குறிச்சொற்கள்: செய்திகள், நெல் பயிரில் தண்டு துளைப்பான் புழு தாக்குதல்: விவசாயிகள் அச்சம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது