உரக்கொள்கை மானியத்தை அமல்படுத்த எம்.எப். எல்., தொழிலாளர் எதிர்பார்ப்பு
10:50 PM உரக்கொள்கை மானியத்தை அமல்படுத்த எம்.எப். எல்., செய்திகள், தொழிலாளர் எதிர்பார்ப்பு 0 கருத்துரைகள் Admin
மதுரை : எம்.எப்.எல்., உரநிறுவனத்திற்கு உரக்கொள்கை மானியத்தை 2009 வரை அமல்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் உள்ள மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (எம்.எப்.எல்.,) நிறுவனம் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனம். விஜய் என்ற பெயரில் ரசாயன உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரம், விஜய் நீம் என்ற பூச்சிக் கொல்லி மருந்தையும் உற்பத்தி செய்கிறது. காம்ப்ளக்ஸ் உரம் 10 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிறுவனம் ஓராண்டாக 800 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்துடன் இயங்கி வந்தது. இத்துறை அமைச்சராக அழகிரி பொறுப்பேற்ற பின், நூறு நாள் செயல் திட்டத்தில் இந்த நிறுவனத்தை சேர்த்தார். 166 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கினார். எம்.பி.,க்கள் கோரிக்கையை தொடர்ந்து யூரியா உற்பத்தி செய்ய டன் ஒன்றுக்கு 3070 ரூபாய் மானியமாக உயர்த்தி தர உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2009 ஆகஸ்ட் முதல் நவம்பர் முடிய 17 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதனால் இந்த உரத்தொழிற்சாலை புதிய உத்வேகம் பெற்றுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் முடக்கப்பட்ட இந்த நிறுவனம், விவசாயிகளிடையே பெரும் மதிப்பை பெற்ற விஜய் 17:17:17, விஜய் 20: 20:0:13 காம்ப்ளக்ஸ் உர உற்பத்தியை மீண்டும் இந்த ஆண்டே துவங்க, 4,000ம் டன் யூரியா, பாஸ்பாரிக் அமிலம், அம்மோனியம் சல்பேட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் எம்ப்ளாயீஸ் புராக்ரசிவ் யூனியன் தலைவர் ஜெயசங்கர், பொதுசெயலாளர் சந்திரசேகர் கூறுகையில், ""மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஆறாவது ஊதிய குழுவின் சம்பளத்தை பெற்றுவிட்ட நிலையில் இந்நிறுவனத்திலும் ஊதிய உயர்வு அமல்படுத்த வேண்டும். என்.பி.எஸ்-3 உரக்கொள்கை மானியத்தை 2006 அக்டோபர் முதல் 2009 மார்ச் வரை அமல்படுத்த வேண்டும். இங்கு பணியாற்றிய 1800 பேரில் தற்போது 829 பேர் மட்டுமே பணியாற்றி சாதனை புரிந்துள்ளனர். மேலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பினால் கூடுதலாக 800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என்றனர்.
குறிச்சொற்கள்: உரக்கொள்கை மானியத்தை அமல்படுத்த எம்.எப். எல்., செய்திகள், தொழிலாளர் எதிர்பார்ப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது