இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

புதுச்சேரி ஏரிகள் நிரம்புகின்றன: நெய் வயல்கள் மூழ்கி சேதம்

புதுச்சேரி, டிச. 17: புதுச்சேரியில் ஒரு பெரிய ஏரி உள்பட 25 ஏரிகள் நிரம்பின.

நீர்பிடிப்புப் பகுதிகளிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் மற்றொரு பெரிய ஏரி உள்பட மீதியுள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.

இதற்கிடையில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக கதிர் வந்த வெள்ளைப் பொன்னி உள்ளிட்ட நெற்பயிர்கள் வயலில் அதிகமாக தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 84 ஏரிகள் உள்ளன. இதில் பெரிய ஏரியான ஊசுட்டேரியின் முழு கொள்ளளவு 12 அடி. இந்த முழு அளவுக்கும் ஏரி நிரம்பியுள்ளது. இதைத் தவிர கீழ்பரிக்கல்பட்டு, மேல் பரிக்கல்பட்டு, மணப்பட்டு, அரங்கனூர், சேலியமேடு, ஆதிங்கப்பட்டு, பின்னாச்சிக்குப்பம், கிருமாம்பாக்கம், குடியிருப்பு பாளையம், மணமேடு, கெடுவனூர், குருவிநத்தம், இருளன்சந்தை, முருங்கப்பாக்கம், உழந்தை, சேதாரப்பட்டு, துத்திப்பட்டு உள்ளிட்ட 24 ஏரிகள் நிரம்பியுள்ளன.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment