விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி
2:10 PM செய்திகள், விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி 0 கருத்துரைகள் Admin
பரமத்திவேலூர், டிச.15: பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்குத் தரமான விதை உற்பத்தி செய்வது குறித்த தொழில் நுட்ப பயிற்சி வரும் 21-ம் தேதி முதல் நடைபெறுகிறது.
பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் க.வீரப்பன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மூலம் விதை கிராம திட்டத்தின் கீழ் 500 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நிலக்கடலை,பயிர் வகை மற்றும் சிறு தானிய பயிர்களில் விதைகள் உற்பத்தி செய்வது குறித்த தொழில் நுட்ப பயிற்சி மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
விதை நிலை, பூக்கும் நிலை, அறுவடைநிலை ஆகியவை குறித்து தரமான விதைகள் உற்பத்தி செய்ய பரமத்தி, பில்லூர், வில்லிபாளையம், கூடச்சேரி, மணியனூர், கோளாரம், பிராந்தகம், செறுக்கலை, இருட்டணை மற்றும் புன்செய் இடையாறு மேல்முகம் ஆகிய கிராமங்களில் வரும் 21-ம் தேதி முதல் பயிற்சிகள் நடைபெறுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் அந்தந்தப் பகுதி வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளா
குறிச்சொற்கள்: செய்திகள், விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது