ஜனவரி 1 முதல் சிங்கப்பூருக்கு ஒசூர் காய்கறிகள்!
11:10 AM செய்திகள், ஜனவரி 1 முதல் சிங்கப்பூருக்கு ஒசூர் காய்கறிகள் 0 கருத்துரைகள் Admin
ஒசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகா முழுவதும் ஆண்டு முழுவதும் 10 முதல் 12 டிகிரி செல்சியஸ் தட்ப வெட்பம் நிலவி வருகிறது. இங்கு உள்ள 126 கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் காய்கறிகளைப் பயிர் செய்து வருகின்றனர்.
தக்காளி, உருளை, பீன்ஸ், கேரட், செüசெü, வெங்காயம், முட்டைகோஸ், கொத்தமல்லி, பீட்ரூட், புதினா உள்ளிட்டவை இங்கு பயிர் செய்யப்படுகின்றன.
இவை பெருமளவு ஒசூர் அருகே உள்ள பத்தளப்பள்ளி மொத்த விற்பனை அங்காடிக்கு அனுப்பப்படுகின்றன. இங்கிருந்து நாள்தோறும் 500 டன் காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுதவிர 300-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் ஒசூர் உழவர் சந்தையில் தினமும் 100 முதல் 150 டன் காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக கோவையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒசூரில் தங்கி, பெரிய விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை நேரடியாக வாங்கி, லாரிகள் மூலம் செல்கின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை பீட்டர்லிம் தலைமையில் இங்கு வந்துள்ள சிங்கப்பூர் மொத்த காய்கறி வியாபாரிகள் ஒசூர், தட்டிகானப்பள்ளி, பூதிநத்தம் ஆகிய கிராமங்களில் பயிர் செய்துள்ள காய்கறிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும், இவர்கள் ஒசூரில் இருந்து சிங்கப்பூருக்கு காய்கறிகளை விற்பனை செய்ய தமிழக வேளாண்மைத்துறை மூலம் ஓப்பந்தம் செய்துள்ளனர். பன்முக தொழில் நகரமான ஒசூர், தினமும் வெளிநாடுகளுக்கு ரோஜா பூக்களை ஏற்றுமதி செய்து, ரோஜா பூ நகரமாகவும் திகழ்கிறது. இப்போது காய்கறிகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது.
குறிச்சொற்கள்: செய்திகள், ஜனவரி 1 முதல் சிங்கப்பூருக்கு ஒசூர் காய்கறிகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது