ஜன.21 முதல் கள் இறக்கும் அறப்போராட்டம்: கள் இயக்கம் அறிவிப்பு
11:04 AM செய்திகள், ஜன.21 முதல் கள் இறக்கும் அறப்போராட்டம்: கள் இயக்கம் அறிவிப்பு 0 கருத்துரைகள் Admin
பல்லடம் டிச 14: ஜனவரி 21 முதல் கள் இறக்கும் அறப்போராட்டம் துவக்கப்படும் என்று கள் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பல்லடத்தில் திங்கள்கிழமை கூறியது:
தமிழகத்தில் கள்ளுக்கு தடையை நீக்கி எந்த வரியும் இன்றி விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். இதன் பின்னர் தான் உலக செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்த வேண்டும். இக்கோரிக்கையை உதாசீனப்படுத்தினால் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி உள்நாட்டிலும், அயல் நாட்டிலும் சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
டாஸ்மாக் மதுபானம் கள்ளை விட சிறந்தது என்று நிரூபித்தால் கள் இயக்கம் தனது கோரிக்கையை கைவிட்டு போராட்டத்தை விலக்கி கொள்ளும்.
தேங்காய் நாரை நேரடியாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசும், தென்னை வாரியமும் உதவ வேண்டும். உணவு பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்கள் உருவாக்க வேண்டும். தேசிய வேளாண்மை விளைபொருள் விலை நிர்ணய குழு பரிந்துரையை ஏற்று அரசு விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க வேண்டும். சிறப்பு பொருளாதாரம் என்கிற பெயரில் விளைநிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
மின் பற்றாக்குறை ஏற்படும்போது ஒரு வளாகத்தினுள் கூரைக்குள் இயக்கும் தொழிற்சாலைகளுக்கு இரவு நேர மின்சாரமும்,விவசாயத்திற்கு பகல் நேர மின்சாரமும் வினியோகிக்க வேண்டும்.வேளாண்மை துறைக்கும் தனியாக நிதி நிலை அறிக்கை மத்திய, மாநில அரசில் தாக்கம் செய்யவேண்டும்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்,கிராம கைவினை கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒய்வூதியம் வழங்க வேண்டும்.
விளைவுகளையும், விபரீதங்களையும் ஆய்ந்து தெளிவு பெறாதவரை மரபணு மாற்றப்பட்ட பயிர் மற்றும் மலட்டு விதை தொழில் நுட்ப அறிமுகத்தை தடை செய்ய வேண்டும். என்றார்.
குறிச்சொற்கள்: செய்திகள், ஜன.21 முதல் கள் இறக்கும் அறப்போராட்டம்: கள் இயக்கம் அறிவிப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது