இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஆத்மா திட்ட பயிற்சி முகாம்

பள்ளிபாளையம்: சௌதாரபுரம் கிராமத்தில் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு ஆத்ம திட்ட பயிற்சி முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். பயிர் இன்சூரன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி பங்கேற்று பேசியதாவது: விவசாயிகள் தாம் சாகுபடி செய்யும் பயிர்களை இன்சூரன்ஸ் செய்து கொள்ள வேண்டும். வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேதம் ஏற்பட்டால் பிரிமியம் செலுத்தி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்பவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.


இது சம்மந்தமான படிவம் பள்ளிபாளையம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். மரவள்ளி, மல்பரி, பப்பாளி போன்றவற்றை தாக்கும் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை, மண் வளம் அதிகரிப்பு செய்யும் முறை, பசுந்தாளுரப்பயிர் விதைப்பு, ஏரி வண்டல் இடுதல், தொழு உரம் இடுதல் போன்ற தொழில் நுட்பம் குறித்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.


ஈரோடு பயிற்சி பிரிவு தலைவர் உதயகுமார், வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன், துணை வேளாண் அலுவலர் ஞானபிரகாஷம், வேளாண் அலுவலர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment