துல்லிய பண்ணையில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்
9:34 PM செய்திகள், துல்லிய பண்ணையில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் 0 கருத்துரைகள் Admin
துல்லிய பண்ணையில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்
ப.வேலூர்: "துல்லிய பண்ணைத்திட்டத்தில் கரும்பு, மக்காச்சோள பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 65 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது' என, பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குனர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பரமத்தி வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கரும்பு, மக்காச் சோளப் பயிர்களுக்கு ஒரு ஹெக்டேர் அளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க 65 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் நீர் சிக்கனம், உர சிக்கனம் ஆகிய பயன்கள் கிடைப்பதுடன், களைகள் கட்டுப் படுத்தப்படுகிறது.
25 முதல் 30 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது. வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள இந்த நேரத்தில் துல்லிய பண்ணை திட்டம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.இது தொடர்பாக விபரங்கள் தேவைப்படின், பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விபரம் பெறலாம்.
சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், நெல் நடவு வயலில் அடியுரமாக ஜிங்க் சல்பேட் இடாத இடங்களில் இலைகள் வெளிரி காணப்பட்டால் 0.5 சதவீதம் ஜிங்க் சல்பேட் கைசல் தெளிக்க வேண்டும். அதாவது ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லி., நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மத்திய மற்றும் நீண்ட கால ரகங்களுக்கு நட்ட 30, 40, 50வது நாளிலும், குறுகிய கால ரகங்களுக்கு நட்ட 20, 30, 40வது நாளிலும் 0.5 சதவீதம் ஜிங்க் சல்பேட் கரைசலை தனியாக தெளித்து கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: செய்திகள், துல்லிய பண்ணையில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது