இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

அரியலூர்: விவசாயிகளுக்கு தேவையான உரம் இருப்பு: அரியலூர் கலெக்டர் உறுதி

அரியலூர் மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மையை இயந்திர மயமாக்கல் திட்டத்தின்கீழ், பவர்டில்லர் 45 ஆயிரம் ரூபாய் மானியத்தில் 55 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வேளாண்துறைக்கு தேவையான களையெடுக்கும் கருவிகள் 12 ஆயிரத்து 500 ரூபாய் மானியத்திலும், சீன மாடல் நெல் நடவு இயந்திரம் 75 ஆயிரம் ரூபாய் மானியத்திலும், 10 ஹெச்.பி., களையெடுக்கும் கருவி 50 ஆயிரம் ரூபாய் மானியத்திலும், பழ மரங்களுக்கான விசை தெளிப்பான 20 ஆயிரம் ரூபாய் மானியத்திலும், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான நெல் அறுவடை மற்றும் மக்காச்சோள அறுவடை இயந்திரங்கள் 33 சதவீத மானியத்திலும், வழங்கப்படுகின்றன. நீர்வள நிலவள திட்டத்தின்கீழ், ஆனைவாரி ஓடை உபவடிவ நிலப்பகுதி ஏரியின், ஆயக்கட்டு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் அமைக்கப்படும் தெளிப்பு நீர் பாசன அமைப்பிற்கு, 65 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.


சிறு பாசன திட்டத்தில் விசை துளைக்கருவி, நில பௌதீக ஆய்வு கருவி, கைத்துளை கருவி போன்றவை வாடகைக்கும் விடப்படுகிறது. செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் செயல்படுத்த அரியலூர் மாவட்டத்துக்கு, 19.20 லட்சம் ரூபாய் வரப்பெற்று, 18 லட்சம் ரூபாய் மதிப்பில் 36 பண்ணைக்குட்டைகளும், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு ரீசார்ஜ் சாப்ட்களும், அரியலூர் பஞ்.,யூனியனில் அமைப்பதற்காக பணிகள் நடக்கிறது.


அரியலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு, நெல் சாகுபடி 21 ஆயிரத்து 227 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு விவசாயம் ஏழாயிரத்து 69 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் ஆறாயிரத்து 990 ஹெக்டேர் பரப்பளவிலும், பயிறு வகைகள் 853 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்வதன் மூலம், கடந்த ஆண்டை விட அதிக அளவில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


மேலும் 274.99 டன் மெட்ரிக் டன் விதை நெல்லும், 9.548 மெட்ரிக் டன் சிறு சிறு தானியங்களும், 5.537 மெட்ரிக் டன் பயிறு வகைகளும், 34.151 மெட்ரிக்டன் நிலக்கடலையும், விதை விநியோகம் செய்யப்பட்டு, அரியலூர் மாவட்டத்துக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


சம்பா சாகுபடிக்கு ஏற்ற உரங்களும் வேளாண்மைதுறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் யூரியா 769 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி., 253 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 451 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் உரம் 73 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளன. இவற்றை விவசாய பெருமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.விவசாயிகளின் முதன்மை கோரிக்கையான மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அரியலூரில் இயங்க, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து அலுவலர்கள் கூட்டம், விவசாயிகள் குறைகள் அடிப்படையில் சிறப்பு கூட்டமாக நடத்தப்படும்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment