கடலூர் - 40 ஆயிரம் ஏக்கர் மானாவாரி பயிர் சேதம் : நிவாரணம் கோரி விவசாயிகள் எதிர்பார்ப்பு
8:16 PM கடலூர் - 40 ஆயிரம் ஏக்கர் மானாவாரி பயிர் சேதம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
சிறுபாக்கம் : தொடர் மழையால் பாதித்த மானாவாரி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மங்களூர், நல்லூர் ஒன்றியங்களை சேர்ந்த கிராமங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, மல்லி, மணிலா, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. அனைத் தும் முதிர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த தொடர் கன மழையினால் மானாவரி பயிர் கள் முற்றிலுமாக அழிந்துள்ளன. மக்காச் சோள கதிர்கள் முளைப்பு விட்டுள்ளன. பருத்தி காய்கள் கருகி வீணாகியுள்ளன. இதேபோன்று பிற பயிர்களும் அழுகியுள்ளதால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
குறிச்சொற்கள்: கடலூர் - 40 ஆயிரம் ஏக்கர் மானாவாரி பயிர் சேதம், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது