இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஈரோடு- பாரம்பரிய விவசாய முறைகளை பாதுகாக்க வேண்டும் வேளாண் கருத்தரங்கில் தீர்மானம்

பாரம்பரிய விவசாய முறைகளையும், விதைகளையும் பாதுகாக்க வேண்டும்' என ஈரோட்டில் நடந்த வேளாண் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் கிரியேட் அறக்கட்டளை சார்பில், வேளாண் நிகழ்ச்சி நடந்தது. முதலில் "வேளாண் அங்காடிகள் பயாளிகள் பார்வையில்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. வேளாண் அங்காடிகள் மேம்பாட்டு மன்ற தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். கிரியேட் அறக்கட்டளை தலைவர் துரைசிங்கம் முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் அம்பலவாணன், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன், அறக்கட்டளை அறங்காவலர் பொன்னம்பலம் ஆகியோர் பேசினர்.
பின்னர் "அங்காடிகள் தற்போதைய கட்டமைப்புகளும், பிற வசதிகளும் ஓர் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பொருளாளர் நல்லசாமி, திருத்துறைபூண்டி கிரியேட் பயிற்சி இயக்குனர் ஜெயராமன், சிதம்பரம் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். "வருங்கால வேளாண் அங்காடிகள்' என்பது குறித்து, தமிழ்நாடு அரிசி அரவை ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வர்த்தக சம்மேளனத்தின் ஆலோசகர் ஜெகதீசன், தர்மபுரி தனசேகரன், திருப்பூர் கோவிந்தராஜன், கர்நாடகமாநிலம் கிருஷ்ணபிரசாத் ஆகியோர் பேசினர்.
"அரிசி உற்பத்தி முதல் நுகர்வு வரை பிரச்னைகளும், சவால்களும்' என்ற தலைப்பில், கருத்தாய்வு நடந்தது. ஈரோடு மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வர்த்தக சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் பயன்படும் வகையில், வேளாண் அங்காடிகளை மேம்படுத்த வேண்டும். வேளாண் அங்காடி தொடர்பான வெளியீடுகளை வெளியிட வேண்டும். வேளாண் அங்காடி மேம்பாட்டுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் மற்றும் அங்காடிகளை நிர்வாகித்தல் ஆகியவற்றை தேவைப்படுபவர்களுக்கு வழங்க வேண்டும்.
இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட விளை பொருட்களுக்கான சந்தையை உருவாக்க வேண்டும். பாரம்பரிய விவசாய முறைகளையும், விதைகளையும் உயிர்பிக்க வேண்டும். மரபணு மாற்றுமுறை விவசாயம் மற்றும் அதனால் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வேளாண் அங்காடிகள் மேம்பாட்டு மன்ற செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment