பருவ நிலை பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
8:48 PM செய்திகள், பருவ நிலை பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு 0 கருத்துரைகள் Admin
பருவ நிலை பயிர் காப்பீடு திட்டத்தை முதல் கட்டமாக ராமநாதபுரத்திலும் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் மிக குறைந்த ஆண்டு சராசரி மழை (500 மி.மீட்டருக்கும் கீழ்) பெறும் மாவட்டங்களின் வரிசைப்பட்டியலில் ராமநாதபுரம் முதலிடம் வகிக்கிறது. இதனால், இங்குள்ளவர்கள் விவசாய தொழில் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறமுடியவில்லை. எந்தவொரு தொழில் வளர்ச்சிக்கும் நீர் ஆதாரமே முக்கிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் விவசாயம் மட்டுமல்லாது பிற தொழில்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாத நிலையே நீடிக்கிறது. இதனால்தான் இந்தியாவில் உள்ள 45 வறட்சி மாவட்டங்களின் வரிசைப்பட்டியலில் டாப் டென்னில் ராமநாதபுரம் இடம் பெற்றுள்ளது.
இந்தநிலையில், அரசு மானியத்துடன் கூடிய பருவ நிலை பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் முதல் கட்டமாக விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வரிசையில் ராமநாதபுரத்தையும் சேர்த்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

குறிச்சொற்கள்: செய்திகள், பருவ நிலை பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது