இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள்: விவசாயிகள் கவலை

தினமலர்

தேவாரம்: தேவாரம் பகுதியில் விவசாய நிலங்களில் காட்டு யானை கூட்டம் புகுந்து விளைந்த பயிர் களை நாசப்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள் ளனர். சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித் துள்ளதால் அப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக தேவாரம் பகுதியில் இரண்டு மற்றும் ஐந்து யானைகள் கொண்ட காட்டு யானைக்கூட்டம் வனப் பகுதியை விட்டு விவசாய நிலங்களில் ஊடுருவுகின்றன.


இரவில் தோட்டப் பகுதிகளுக்கு வரும் காட்டு யானைக் கூட்டம் அதிகாலை வரை தோட்டங்களில் தங்கி பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் அச்சத் துடன் தோட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்; சில வாரங்களாக அடிவாரத்தை ஒட்டிய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் கூட்டமாக நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த கப்பை கிழங்கு, மக்காச்சோளம் ஆகியவை பல ஏக்கர் பரப் பளவில் வீணாகி விட்டது.


தற்போது காட்டுயானைகள் கூட்டமாக தோட்டங்களுக்குள் புகுந்து விளைந்த பயிர்களை நாசப்படுத்துகின்றன. பாழை விடும் பருவத்தில் உள்ள இளம் தென்னை மரங்களின் குறுத்தை மட்டும் யானைகள் உருவிவிடுகின்றன. மக்காச்சோளம் பயிரிடப் பட்டுள்ள நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த மூன்று நாட்களில் பெரம்புவெட்டி புலத்தில் 20 ஏக்கர், சாக்குலூத்து புலத்தில் ஏழு ஏக்கர், குதிரை பாஞ் சான் பகுதியில் 20 ஏக்கர் கப்பை கிழங்கு தோட்டம் பாதிப்புக் குள்ளாகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்க பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment