கோவை அருகே குட்டை தூர்வாரும் பணி விவசாயிகள் எதிர்ப்பு
9:20 PM கோவை அருகே குட்டை தூர்வாரும் பணி விவசாயிகள் எதிர்ப்பு, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
பேரூர் : குட்டையை தூர்வார, தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேரூர், தீத்திபாளையம் ஊராட்சியிலுள்ள கன்னிமார் குட்டையை தூர்வாரும் பணி ஐந்து லட்சம் ரூபாயில் சமீபத்தில் துவக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையின் போது குட்டையில் தண்ணீர் நிரம்பியதால், தூர்வாரும் பணி தடைபட்டது. இந்நிலையில், குட்டையில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றிவிட்டு, தூர்வாரும் பணியை துவக்க ஊராட்சி நிர்வாகத்தை, ஒன்றிய அதிகாரிகள் நிர்பந்தம் செய்துள்ளனர். இதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குட்டையில் தேங்கியுள்ள நீரை அகற்றக்கூடாதெனவும், தானாக வற்றிய பிறகே பணிகளை துவக்க வேண்டும், எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
குறிச்சொற்கள்: கோவை அருகே குட்டை தூர்வாரும் பணி விவசாயிகள் எதிர்ப்பு, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது