இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

திருவண்ணாமலை: 10 ஆண்டாக மூடி கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடம்: திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை: "வந்தவாசி தொகுதியில் கீழ்கொடுங்காலூரில் கட்டி முடிக்கப்பட்டு, பத்து ஆண்டாக திறக்கப்படாமல் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வந்தவாசி தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் பிரச்சார பணியில் தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., வினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வந்தவாசி தொகுதியை பொறுத்தவரையில் எந்தவித தொழிற்சாலையும் இல்லாமல் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தொகுதியாகும். இதில், கீழ்கொடுங்காலூர், ஓசூர் ஆகிய இரு பிர்காக்களில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் டன் நெல் உற்பத்தி விளைவிக்கும் பகுதியாகும். மாவட்டத்தில் அதிகமாக நெல் விளைவிக்க கூடிய பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு 25 கிராமங்களை சேர்ந்த 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் விதத்தில் வந்தவாசி அருகே கீழ்கொடுங்காலூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் கட்டப்பட்டது. ஆனால், இவை கட்டி முடிக்கப்பட்டு பத்து ஆண்டாக திறக்கப்படாமல் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனை திறக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல முறை ஆர்ப்பாட்டம் நடத்தியும் பலன் இல்லை.


மேலும் இங்குள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர் கடன் கொடுக்கப்படாமல் அலைக்கழிப்பதோடு உரம் தட்டுப்பாடும் இப்பகுதியில் நீண்ட நாளாக உள்ளது. கீழ்கொடுங்காலூர் அரசு மருந்தகம் உள்ளது. இங்கு வரும் நோயாளிகளுக்கு புற நோயாளிகளாக கருதப்பட்டு அனைவருக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு தங்கி சிகிச்சை பெறும் வசதி கிடையாது. "மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி செய்திட வேண்டும்' என்ற நீண்ட நாள் கோரிக்கையும் நிறைவேறாமல் உள்ளது. விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால் பனை உற்பத்தி பொருளை விற்பனை செய்வதற்கு காதி நிறுவனம் மூலம் பத்து ஆண்டுக்கு முன் பனை பொருள் உற்பத்தி விற்பனை மையம் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் அங்கு ஆயிரக்கணக்கான பனை விவசாயிகள் பயனடைந்து வந்தனர். அங்கு பனை மூலம் உற்பத்தி செய்யப்படும், பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனை நாரால் செய்யப்பட்ட பிரஸ், பனை பொருட்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப்பொருள் ஆகியவற்றை விற்பனை செய்யும் மையமாக விளங்கி வந்த மையம் தற்போது அவை மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலை இழந்துள்ளனர்.


மருதாடு ஏரி சுமார் ஆயிரம் ஏக்கரில் உள்ளது. அந்த ஏரியின் மூலம் சிறிய தடுப்பணை கட்டினால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஏரிகள் மூலம் பாசன வசதி செய்து பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் நிலை ஏற்படும், இங்கு தடுப்பணை கட்ட கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஆளும் தி.மு.க., வினரும், எதிர்கட்சியான அ.தி.மு.க.,வும் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்களே தவிர அப்பகுதி மக்குளுக்கு உள்ள குறையை கண்டு கொள்ளாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment