இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

35 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின : தொடர் மழையால் மக்கள் அவதி





கடலூர் : மாவட்டத்தில் கடந்த 6 நாளாக பெய்துவரும் தொடர் கன மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் 35 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் மணிலா பயிர் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள "வார்டு' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக 14ம் தேதி நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
மழையளவு: நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மீ.மீட்டரில் வருமாறு: பண்ருட்டி 145, லால்பேட்டை 135, பெலாந்துறை 132, தொழுதூர் 120, காட்டுமன்னார்கோவில் 111, கீழ்செருவாய் 105, பரங்கிப் பேட்டை 102, கடலூர் 100, வேப் பூர் 98, காட்டுமைலூர் 92, புவனகிரி 90, சிதம்பரம் 85, கொத்தவாச் சேரி 85, அண்ணாமலை நகர் 80.60, வானமோதேவி 73.20, லக் கூர் 70, சேத்தியாத்தோப்பு 68, ஸ்ரீமுஷ் ணம் 55, மே மாத்தூர் 51, குப்பநத் தம் 42.40,விருத்தாசலம் 40.10 என மாவட்டம் முழுவதும் 1,880.30 மி.மீட்டர் மழை பதிவானது.
கடல் சீற்றம்: புயல் சின்னம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் கடந்த 12ம் தேதி ஏற்றப் பட்ட புயல் எச்சரிக்கை 3ம் எண் கூண்டு நேற்று முன்தினம் மாலை இறக்கப்பட்டது. இருப்பினும் கடல் சீற்றம் நேற்று அதிகமாக காணப்பட்டதால் நேற்றும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
கன மழை காரணமாக தாழ் வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. குறிப் பாக சிதம்பரத்தில் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரும் அவதிக் குள்ளாகியுள்ளனர். கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எப்பொழுதும் "பிசி'யாக காணப்படும் மார்க்கெட் கடந்த மூன்று நாளாக கூட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டது.
பயிர்கள் மூழ்கின: மாவட்டத் தில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஏக்கர் சம்பா நெற் பயிரும், கடலூர், நாணமேடு, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, அண்ணாகிராமம், கிள்ளை, பிச்சாவரம், குள்ளஞ்சாவடி, நடுவீரப்பட்டு, சேடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கர் மணிலா பயிரிடப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வீராணம் ஏரி பாசன பகுதியான கண்ணங்குடி, கீழ்நத்தம், ஆடூர், கீழ் அனுவம்பட்டு, கோவிலாம்பூண்டி, சிதம்பரநாதன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்து 30 முதல் 40 நாட் களான 15 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற் பயிர்களும், பெருமாள் ஏரி மற்றும் வாலாஜா ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் சுற்று வட்டார பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர் கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதேபோன்று கார்த்திகை தீபத்திற்கு பிறகு சுமார் 500 ஏக்கரில் மானாவாரியாக விதைக்கப் பட்ட மணிலா பயிர்கள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், "மாவட்டத்தில் இன்னும் 2 நாட்கள் மழை நீடித்தால் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற் பயிரும், 500 ஏக்கர் மணிலாவும் முற்றிலும் அழிந்து போகும் என கவலையுடன் தெரிவித்தனர். கடந்த 6 நாட்களாக பெய்து வரும் மழையினால் தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து வேளாண் துறையினர் கணக்கெடுக்கத் துவங்கியுள்ளனர். மழை தொடர்வதால் தற்போதைய நிலை குறித்து சரியாக கணிக்க முடியாத சூழல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment