இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

குடுமியான் பண்ணையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஆலங்குடி: "புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை பண்ணையை சீரமைத்து தரம் உயர்த்த வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடுமியான் மலையில் அண்ணாதுரை ஆராய்ச்சி பண்ணை ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில், பல்வேறு ஆராய்ச்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், பத்துக்கும் மேற்பட்டவை வேளாண் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றது.இது தமிழகத்திலேயே மிக பெரிய ஆராய்ச்சி பண்ணையாக செயல்பட்ட்டது. இங்கு தென்னை ஆராய்ச்சி, மா, மர கன்று உற்பத்தி, மாங்காய், நெல்லிக்காய், முருங்கை காய், தக்காளி கீரை வகைகள், எலுமிச்சை, சப்போட்டா பழம், கொய்யா பழம் போன்ற பழங்கள் உற்பத்தி செய்ய பட்டு பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.


பண்ணையின் சிறப்பாக பாம்பு, தேள் போன்ற விஷங்களை முறியடிக்கும் மூலிகை பண்ணையும் இருந்தது. தற்போது இவைகள் பராமரிப்பின்றி அழிந்துவிட்டது. மா, கொய்யா, தென்னை போன்ற உற்பத்தியும் மிகவும் குறைந்துவிட்டது. எப்போதும் பரபரப்பாக இயங்கிய பண்ணை தற்போது மந்தமாகி விட்டது. இதனால் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது.எனவே, அண்ணாதுரை ஆராய்ச்சி பண்ணையை மீண்டும் புதுப்பொழிவுடன் பழவகை, கீரை வகை, மருத்துவ இயற்கை மூலிகை செடி, பசுமையாக்கும் முறையில் மரங்களை வளர்க்க மரகன்றுகள் நட்டு பண்ணையை மேம்படுத்தி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment