இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

காவிரி சீரமைப்புக்கு ரூ.5,100 கோடி திட்டம்​​: முதல்வர் தகவல்

காவிரி மற்றும் கிளை நதிகளில் சீரமைப்பு மற்றும் கரைகள் பலப்படுத்த ரூ.5,100 கோடியில் பெரிய திட்டம் ஒன்று மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.மேட்டூர் அணையின் பவளவிழா ஆண்டை ஒட்டி,​​ அதன் வலதுகரையில் குன்றின் மீது 75 அடி உயரத்தில் பவள விழா கோபுரத் தூண் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.​ தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோகான்பரன்ஸ் மூலம் அடிக்கல்லை திறந்து வைத்து முதல்வர் பேசியதாவது:மேட்டூர் அணையின் கீழே வெள்ளக் கால்வாய்களில் கிடைக்கும் கூடுதல் நீரைத் தடுத்து நிறுத்திட கல்லணையைத் தவிர வேறு அணைகள் இல்லை.​ எனவே கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கதவணை அமைக்க 5.2.2009-ல் ரூ.189 கோடியை தமிழக அரசு ஒதுக்கி,​​ பணிகள் இப்போது நடந்து வருகின்றன.​ இந்தக் கதவணையின் மூலம் தேக்கப்படும் வெள்ள நீர் வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடப்படும்.மேலும் காவிரி,​​ கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை செப்பனிடும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.375.90 கோடிக்கு ஒப்புதல் தந்துள்ளது.​ இதில் மாநில அரசின் பங்காக ரூ.93.97 கோடியைத் தர தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.காவிரிப் பாசன விவசாயிகள் பயன்பெறுவதற்காக,​​ திமுக அரசு அமையும்போதெல்லாம் காவிரியிலும்,​​ கிளை ஆறுகளிலும் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை விவசாயிகள் நன்கறிவர்.2006-ல் இந்த அரசு அமைந்ததும் ரூ.35.80 கோடியில் தூர்வாரும் பணிகள் ​நிறைவேற்றப்பட்டன. ​ வரும் ஆண்டில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து,​​ பொதுப்பணித் துறையும்,​​ ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து,​​ மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னதாகவே தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடித்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இதுதவிர,​​ தொன்மைவாய்ந்த காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் அமைந்துள்ள மதகுகள்,​​ அணைகள்,​​ கதவணைகள் ஆகியவற்றைச் சீரமைத்திடவும்,​​ கரைகளைப் பலப்படுத்திடவும்,​​ வெள்ளக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் உதவிடும் வகையில் தமிழக அரசு ரூ.5,100 கோடியில் ஒரு பெருந்திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.மேட்டூர் அணையின் பவளவிழா நினைவாக 75 அடி உயரத்தில் பவள விழாக் கோபுரத் தூண் அமைத்து,​​ மேட்டூருக்குச் சுற்றுலா வரும் பயணிகள் அதன் மேல் ஏறி நின்று மேட்டூர் அணையையும்,​​ நீர்த் தேக்கத்தின் விரிந்து பரந்துள்ள மாட்சியையும்,​​ அதன் அருகில் அமைந்துள்ள இயற்கைக் காட்சிகளையும்,​​ மேட்டூர் நகரின் ​தோற்றத்தையும் கண்டு மகிழ வகை செய்யும் திட்டத்துக்கு ரூ.1 கோடியை அரசு அனுமதித்துள்ளது என்றார் முதல்வர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment